இது இந்துக்களின் கலாச்சாரம் அல்ல.. பாஜகவை சரமாரியாக தாக்கிய சசி தரூர்.. என்ன இப்படி சொல்லிட்டாரே!
கொல்கத்தா: பாஜகவினர் இந்துத்துவம் பற்றி தொடர்ந்து பேசி வரும் நிலையில், "பிறர் மீதான வெறுப்பு இந்துக்களின் வழியாக இருக்க முடியாது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை உறுப்பினருமான சசிதரூர் கூறியுள்ளார்.
சமீப நாட்களாக இந்துத்துவம் குறித்து பாஜக தலைவர்கள் கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. கர்நாடகாவில் அரசு கட்டிம் பார்ப்பதற்கு இஸ்லாமிய கட்டிடக்கலையை ஒட்டி இருப்பதால் அதனை இடித்துவிட்டு கோயில் போன்று கட்டிடம் கட்ட வேண்டும் என இந்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கர்நாடகா அரசும் கட்டிடத்தை இடித்துவிட்டு வேறு பாணியில் புதிய கட்டிடத்தை கட்டியது.
அதேபோல போபால் பாஜக எம்.பி பிரக்யா தாகூர், "இந்துக்கள் அனைவரும் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் நம்மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்பது தெரியாது. எனவே வீட்டில் உள்ள ஆயுதங்களை கூர் தீட்டி வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார். மற்றொரு சம்பவத்தில் சான்டா கிளாஸ் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சில இந்துத்துவவாதிகள் வெளிப்படையாகவே, "இந்தியா இந்துக்களுக்கான தேசம்" என்று கூறியுள்ளனர்.

சசிதரூர்
இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மற்றும் பாஜக ஆதரவு பிரமுகர்கள் இவ்வாறு பேசுவது வெறுப்பை தூண்டும் வகையில் இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற 'கொல்கத்தா இலக்கிய விழாவில்' பங்கேற்றிருந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர், "பிறர் மீதான வெறுப்பு இந்துக்களின் வழியாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார். விவேகானந்தரின் தீவிர பற்றாளரான சசீதரூர் இவ்வாறு கூறியிருப்பது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகள் vs மதவாதிகள்
சசிதரூர் மேலும் பேசியதாவது, "விவேகானந்தரை பின்பற்றுகிறோம் என்பதை காட்டுவதற்காக பாஜகவில் உள்ள சிலர் சில மேற்கொள்களை குறிப்பிடுகின்றனர். ஆனால் விவேகானந்தரின் போதனைகளை முழுமையாக படித்த எவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்திருக்கும். அதாவது, அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய நம்பிக்கையை பற்றிதான் அவர் பேசுகிறார் என்பதுதான் அந்த விஷயம். அதேபோல விவேகானந்தரின் பார்வையானது சகிப்புத்தன்மையற்ற இந்துமதம் பற்றியதல்ல.

பதான் சர்ச்சை
19ம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் வந்த அரசியல்வாதிகள், மத சீர்திருத்தவாதிகளை தங்களின் தலைவர்களாக காட்டிக்கொள்ள அவர்கள் கூறிய சில குறிப்பிட்ட வார்த்தைகளைப்பற்றி மட்டும் தொடர்ந்து பேசி வருகிறார். முழுமையை பேசுவதில்லை" என்று கூறியுள்ளார். மேலும், இந்து மதத்தின் பெயரால் மக்களின் நம்பிக்கைகள் ஆயுதமாக்கப்படுகிறது மிகுந்த கவலையளிப்பதாகவும் சசிதரூர் கூறியுள்ளார். வரும் ஜனவரியில் திரைக்கு வரவுள்ள 'பதான்' திரைப்படம் குறித்து பாஜகவினர் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என பலரும் கூறி வரும் கருத்து தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.

பிரக்யா தாகூர்
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சார்யா, "ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துவிடுவேன். ஒரு வேளை வேறு யாராவது எரித்துவிட்டாலும் அவர்களுக்கு நீதிமன்றம் வரை சென்று ஆதரவளிப்பேன்" என்று கூறியிருந்தார். அதேபோல பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறுகையில், "காவி நிறத்தை யாரும் அவமதிக்கக்கூடாது மீறினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். இவ்வாறு தொடர் வெறுப்பு பேச்சுக்களுக்கு மத்தியில் சசிதரூர் பேசியிருப்பது அனைவரின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications