பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு பாதிப்புதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு பாதிப்புதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறிய மோடி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை என்றார்.
இதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 99.3 சதவீத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஆனால் இதற்காக அரசு அதிக செலவு செய்திருப்பதாகவும் ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்பாரா?
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, 2017ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் 3 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் நாட்டிற்கு திரும்பும் என பிரதமர் மோடி கூறினார். அந்த பொய்க்காக பிரதமர் மோடி தற்போது மன்னிப்பு கேட்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக ஆர்பிஐ மீண்டும் நிரூபித்துவிட்டதாகவும் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

15.31 லட்சம் கோடி திரும்பியுள்ளது
ஆர்பிஐயின் அறிக்கையில் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் பணமதிப்பிழப்பிற்கு உள்ளாக்கப்பட்டதில், ரூ.15.31 லட்சம் கோடி மட்டுமே திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications