கர்நாடகாவில் காங். ஆட்சியைத் தக்க வைக்கும் : சித்தராமையா மகன் யதீந்திரா நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

வருணா : கர்நாடகாவில் இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், சித்தராமையாவின் மகனுமாகிய யதீந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மே 12ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் வெற்றியை எதிர்நோக்கி இருக்கின்றன.

Congress will surely win in Karnataka says Dr Yathindra

இந்நிலையில், கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையலாம் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் சித்தராமையா மகனும், வருணா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான யதீந்திரா பேசுகையில், இந்த முறையும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We will surely win in Karnataka says Dr Yathindra. Siddaramaiah Son and Varuna Congress Candidate Dr Yathindra says that, after poll alliance with JDS will be decided by Senior Leaders.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற