ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கூட்டணி.. தொண்டர்கள் செம குஷி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான பகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால், இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்தது இல்லை. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என தொடர்ந்து போராடினர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications