Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PMO அதிகாரி என சுற்றிய மோசடி நபர்-Z பிளஸ் பாதுகாப்பு,புல்லட் ப்ரூப் கார் கொடுத்த காஷ்மீர் அதிகாரிகள்

குஜராத்தை சேர்ந்த கிரன்பாய் படேல் என்பவர் தன்னை பிரதமர் அலுவல் அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் சுற்றியது தெரியவந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்த கிரன்பாய் படேல் என்பவர் தன்னை பிரதமர் அலுவல அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்திய அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரிகளையே ஏமாற்றிவிட்டு இரண்டு முறை ஸ்ரீநகரில் பாதுகாப்பு உள்பட அரசு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இந்த மோசடியை கிரன் பாய் படேல் நடத்திய விவரங்களை இங்கே காணலாம்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரன் பாய் படேல். தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என சொல்லிக்கொண்டு இவர் பலரையும் ஏமாற்றி வந்துள்ளார்.

பிரதமர் அலுவலக அதிகாரி என்ற அடையாளத்துடன் சமூக வலைத்தள கணக்குகளையும் தொடங்கி டிப் டாப் ஆக பல புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். வெரிஃபைடு ட்விட்டர் கணக்கு வைத்திருந்த படேலை ட்விட்டரில் ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என

தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என

குஜராத் மாநில பாஜக பொதுச்செயலாளர் பிரதிப்ஷின்ஹ் வக்ஹேலாவும் படேலை ட்விட்டரில் பின்பற்றி வந்துள்ளார். அதிகாரி போலவே மிடுக்கான ஆடையுடன் வலம் வந்தததால் பலரும் உண்மையிலேயே இவர் பிரதமர் அலுவலக அதிகாரி என நம்பியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், ஜம்மு காஷ்மீருக்கு கிரன் பாய் படேல் இந்த ஆண்டு துவக்கத்தில் சென்று இருக்கிறார். அங்கும் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என அடையாளப்படுத்திகொண்ட கிரன் பாய் படேல் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினாராம். இரண்டு முறை இப்படி ஸ்ரீநகருக்கு சென்று வந்துள்ளார்.

 புல்லெட் புரூப் காரில்..

புல்லெட் புரூப் காரில்..

பிரதமர் அலுவலகத்தின் யுக்தி மற்றும் பிரசாரங்கள் வகுப்பதற்கான கூடுதல் இயக்குநர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு காஷ்மீர் பயணத்தின் சகல அரசு சலுகைகளையும் அனுபவித்துள்ளார். துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாரின் பாதுகாப்பு புடை சூழ புல்லெட் புரூப் மகேந்திரா ஸ்கார்பியோ காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். பட்காம் மாவட்டத்தில் உள்ள தூத்பத்ரி பகுதியில் பனி நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு வீரர்களுடன் இவர் செல்லும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

5 ஸ்டார் ஓட்டலில் தங்கி..

5 ஸ்டார் ஓட்டலில் தங்கி..

தூத்பத்ரியை மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கூட போட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீநகருக்கு தனது முதல் பயணத்தின் போது அரசு செலவில் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு பாதுகாப்பு வீரர்கள் புடை சூழல் சுற்றிய படேல், அடுத்த இரு வாரங்களில் மீண்டும் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார். இதனால், அங்கிருந்த மாஜிஸ்திரேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் போலீசார் கைது

ஸ்ரீநகர் போலீசார் கைது


இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரி என ஒருவர் வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து உளவுத்துறை அதிகாரிகளும் பிரதமர் அலுவலக அதிகாரி என கூறுவது மோசடி நபர் என்று போலீசாரை அலார்ட் செய்துள்ளனர். அதன்பிற்கே குஜராத்தை சேர்ந்த மோசடி நபரான கிரன் பாய் படேலை அவர் தங்கியிருந்த ஓட்டலில் வைத்து ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடந்த 10 தினங்களுக்கு முன்பே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்த பிறகே இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது வெளியில் தெரியவந்துள்ளது. போலியான நபர் மோசடியில் ஈடுபட்டதை கண்டறியாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. குஜராத் மாநில போலீசாரும் இந்த மோசடி நபர் குறித்த விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+