கொரோனா கட்டுப்பாடு- மே.வங்க சிறையில் பயங்கர மோதல்- தீ வைப்பு- ஒருவர் பலி- 12 பேர் படுகாயம்
டம்டம்: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை விடுதலை செய்ய கோரியும் மேற்கு வங்கத்தின் டம்டம் மத்திய சிறையில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிறைவளாகத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் ஒருவர் பலியானதாகவும் 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் சிறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் பல சிறைகளில் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் டம்டம் மத்திய சிறையில் உள்ள கைதிகள், கொரோனாவால் தாங்களும் மரணிக்க நேரிடும் என்று அஞ்சியும் தங்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் வன்முறையில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை இந்த வன்முறை நீடித்தது. சிறை வளாகாத்தில் அலுவலகங்கள், உணவகம் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் இயல்பு நிலைமை திரும்பவில்லை. போலீசார் மீதும் கைதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இம்மோதல்களில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டம்டம் சிறைக்கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறை அதிகாரிகள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications