கொரோனா தாக்குதல் படுதீவிரம்- மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து 3-வது இடத்தில் குஜராத்
அகமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.
Recommended Video
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18985 ஆகவும் உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்பும் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இங்கு 4669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 232 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் 2,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 3-வது இடத்தில் குஜராத் உள்ளது.
கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம். டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது.
இதில் குஜராத்தில்தான் படுவேகமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications