For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

Google Oneindia Tamil News

ஆந்திர: புனித நூலான பகவத் கீதை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கொண்டுச் செல்லும் செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது.

2021ம் ஆண்டில் முதல் விண்கலமாக, பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசோனியா -1 என்ற செயற்கைக்கோளுடன் சேர்த்து மொத்தம் 19 செயற்கைக் கோள்களை, நாளை(பிப்.28) காலை 10:24 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

Countdown begins for Isros new satellite to carry Bhagavad Gita, PM Modi’s photo

பிரேசிலின் அமேசோனியா-1 செயற்கைக்கோளுடன் சேர்த்து இந்தியாவை சேர்ந்த நியூ பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைக் கோள்களும், யுனிட்டி சாட்டின் 3 செயற்கைக் கோள்களும், சத்திஸ்வான் சாட்டின் 1 செயற்கைக் கோள் உட்பட 19 செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த செயற்கைக் கோள் புவியிலிருந்து 637 கிமீ தூரத்தில் அதன் புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு பிரேசிலின் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கும் விவசாயத்தை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும்.

இந்திய விண்வெளித் திட்டத்தை நிறுவியர்களில் ஒருவர் சதீஷ் தவான். இவரது பெயரில் தான் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தான் SD SAT செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று விண்வெளி கதிர்வீச்சு பற்றி அறிவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. மற்றொன்று புவியின் காந்த மண்டலத்தை ஆராயவும், மூன்றாவது பகுதி பரந்த பகுதியில் குறைந்த சக்தி கொண்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க் பயன்பாட்டிற்காக அனுப்பப்படவுள்ளது.

தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன? அரசு முக்கிய அறிவிப்புதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன? அரசு முக்கிய அறிவிப்பு

இந்த விண்கலம் மூலம், 25000 தனி நபர்களின் பெயர்களும் விண்ணுக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளன. பொதுமக்களிடம் விண்வெளி திட்டங்கள், விண்வெளி அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும் வண்ணம் இத்தகைய ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையும் இந்த செயற்கைக்கோளில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. SD கார்டு மூலமாக பகவத் கீதை கொண்டு செல்லப்படுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளின் கீழ்ப் பகுதியில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன், அறிவியல் பிரிவு செயலாளர் டாக்டர் ஆர்.உமாமகேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

English summary
Countdown begins for Isro's new satellite to carry Bhagavad Gita, PM Modi’s photo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X