உள் அலங்கார நிறுவனத்திற்கு பணப்பாக்கி: அசினின் கொச்சி வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: அலங்கார நிறுவனத்திற்கு பணப் பாக்கி வைத்துள்ளதாக நடிகை அசின் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரது கொச்சி வீட்டை ஜப்தி செய்ய எர்ணாகுளம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழில் உள்ளம் கேட்குமே படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜினி, தசாவதாரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த அசின், கஜினியின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிற்கு சென்றார். தொடர்ந்து அங்கு கிடைத்த பட வாய்ப்புகளால் தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்தார்.

இந்நிலையில், அசினுக்கு கேரளாவில் கொச்சி ரவிபுரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. ஆனால், பணிகளை முழுமையாக முடித்துத் தராததால், அதற்கான ஊதியமான ரூ. 10 லட்சத்தை அந்நிறுவனத்திற்கு அசின் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வரும் 14ம் தேதிக்குள் ரூ.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications