For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ10 கோடி மோசடி- முன்னாள் மத்திய அமைச்சர் பன்சாலுக்கு டெல்லி கோர்ட் சம்மன்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வேயில் பணி வாங்கித் தருகிவதாகக் கூறி ரூ10 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் சர்ச்சைக்குரிய அமைச்சராக இருந்தவர் பவன்குமார் பன்சால். அவரது உறவினர்கள், ரயில்வேயில் பணிவாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்து புயலைக் கிளப்பியது.

Pawan Bansal

பின்னர் தமது அமைச்சர் பதவியை பவன்குமார் பன்சால் ராஜினமா செய்தார். இந்த நிலையில் ரயில்வேயில் பணி வாங்கித் தருவதாக ரூ10 கோடி வரை மோசடி செய்தார் என்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் பவன்குமார் பன்சால் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை நிராகரித்த டெல்லி நீதிமன்றம் வரும் 22-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

English summary
A Delhi court on Tuesday summoned former railway minister Pawan Kumar Bansal for deposing as a witness in the cash-for-post railway bribery scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X