வெளியானது அதிரடி கருத்து கணிப்பு.. குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு எழுச்சி
காந்தி நகர்: குஜராத்தில் கடந்த முறையை விட அதிக இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் என சிவோட்டர் - ஏபிபி கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. மேலும் கடந்த தேர்தலை விட இந்த முறை காங்கிரஸ் கட்சி குறைந்த இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஆம்ஆத்மிக்கு இந்த தேர்தலில் எழுச்சி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்க மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது.
அதன்பிறகு 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

பாஜகவின் முயற்சி
இதனால் குஜராத் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் இது அவர்களின் சொந்த மாநிலமாகும். இதனால் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது.

காங்கிரஸ் - ஆம்ஆத்மிக்கு எவ்வளவு இடம்?
மேலும் காங்கிரஸ் கட்சி 31 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் எனவும் ஆம்ஆத்மி கட்சி 7 முதல் 15 இடங்களை கைப்பற்றலாம் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அதிகபட்சம் 39 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெறும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

கருத்து கணிப்பு முடிவு
இந்நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் துவங்கி உள்ளன. அதன்படி CVoter-ABP நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி குஜராத் மக்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கே உள்ளதாகவும், மீண்டும் பாஜக தான் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் சிவோட்டர் - ஏபிபி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் மலரும் தாமரை
இந்த கருத்து கணிப்பின்படி 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜக 131 முதல் 139 இடங்களில் வெற்றி பெறும் என சிவோட்டர் - ஏபிபி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்ற நிலையில் தற்போதைய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு இன்னும் அதிக இடங்கள் கிடைக்கும் என இந்த கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - ஆம்ஆத்மிக்கு எவ்வளவு இடம்?
மேலும் காங்கிரஸ் கட்சி 31 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் எனவும் ஆம்ஆத்மி கட்சி 7 முதல் 15 இடங்களை கைப்பற்றலாம் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அதிகபட்சம் 39 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெறும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸை பாதிக்கும் ஆம்ஆத்மி
மேலும் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதால் அது பாஜகவை பாதிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியை வெகுவாக பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர். அதனை தான் கருத்து கணிப்பும் பிரதிபலிக்கிறது. அதாவது நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை ஆம்ஆத்மி கட்சி அறுவடை செய்யலாம் என கருத்து கணிப்பு சூசகமாக தெரிவித்துள்ளது.

பாஜக கருத்து
இந்த கருத்து கணிப்பு பற்றி குஜராத் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் யமல் வியாஸ் கூறுகையில், ‛‛கருத்து கணிப்பின் கணிப்பை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறோம். ஆம் ஆத்மி கட்சி என்பது குஜராத்தில் ஜொலிக்காது. அந்த கட்சியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது'' என்றார்.

ஆம்ஆத்மி - காங்கிரஸ் நிராகரிப்பு
இருப்பினும் இந்த கருத்து கணிப்பை காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் முற்றிலும் நிராகரித்துள்ளன. ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி கூறுகையில், ‛‛டெல்லி 3 முறை, பஞ்சாப்பில் ஒரு முறை என கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளன. இது குஜராத் தேர்தலிலும் நடக்கும். ஏனென்றால் குஜராத் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்'' என்றார்.

காங்கிரஸ் கூறுவது என்ன?
இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமித் நாயக் கூறுகையில், "கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் தவறானவை என நிரூபணமாகி உள்ளன. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க பாஜக சார்பில் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மி பாஜகவின் பி டீம் ஆக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த முறை பாஜக தோல்வியடையும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications