மாட்டுக் கறி.. முஸ்லீம் முதியவரைக் கொன்றவர்கள் "அப்பாவிக் குழந்தைகள்".. பாஜக தலைவர் திமிர் பேச்சு
லக்னோ: டெல்லி அருகே தாத்ரி என்ற இடத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபரை கொடூரமாக அடித்துக் கொன்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறார்கள் என்று கூறி மடத்தனமாக பேசியுள்ளார் உபி. பாஜக தலைவர் ஒருவர்.
தாத்ரி கிராமத்தை் சேர்ந்த 52 வயதான முகம்மது இக்லாக் என்ற முஸ்லீம், அவரது வீட்டில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கொலைகாரக் கும்பல் இக்லாக்கையும், அவரது மகனையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து தாக்கியது.

செங்கற்களால் சரமாரியாக அடித்தில் இக்லாக் பரிதாபமாக இறந்து போனார். அவரது மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதை விடக் கொடுமை, இக்லாக் வீட்டில் இருந்த கறி மாட்டுக் கறியா, ஆட்டுக் கறியா என்று சோதிக்க அதை தடவியல் சோதனைக்கு போலீஸார் அனுப்பியதுதான்.
இந்த நிலையில் உ.பியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நவாப் சிங் நாகர் என்பவர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு ஆர்வக் கோளாறில்தான் நடந்து விட்டது. மேலும் இதில் ஈடுபட்டதாக கைதானவர்கள் அப்பாவிக் குழந்தைகள். அவர்களுக்கு 10 முதல் 15 வயதுக்குள்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த முட்டாள் மாஜி எம்.எல்.ஏ..
100 பேர் சேர்ந்து இக்லாக்கையும், அவரது மகனையும் சரமாரியாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளன். இந்தக் கும்பலை எப்படிக் குழந்தைகள், அதுவும் அப்பாவிக் குழந்தைகள் என்று இந்த அமைச்சர் கூறுகிறார் என்றே தெரியவில்லை. இப்படி லூசுத்தனமாக பேசிய இவர் தாத்ரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதுதான் கொடு்மையிலும் கொடுமை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications