Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய உயிர்கள்.. சடாரென உடைந்த கிணற்றின் "ஸ்லாப்"! ராமநவமி கொண்டாட்டத்தில் கோர விபத்து.. 35 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் இருந்த கிணற்றின் சீலிங் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மார்ச் 30ம் தேதியான நேற்று நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த விழா களைகட்டியது. ஆனால் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த விழாவில் கலவரமும் வெடித்திருக்கிறது. இப்படி இருக்கையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலில் தீபச் சடங்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

கோயிலின் கிணற்றின் மீது ஒரு ஸ்லாப் போடப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்லாப் மீது நின்று பலர் தீபங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் ஓரு கட்டத்தில் அதிக வெயிட்டை தாங்க முடியாமல் ஸ்லாப் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்லாப் மீது நின்றுக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கீழே இருந்த கிணற்றில் விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், ஸ்லாப் முழுவதுமாக உடையாததால் கிணற்றிற்குள் இவர்களால் இறங்க முடியவில்லை.

விபத்து

விபத்து

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறுகையில், "நாங்கள் விளக்கை ஏற்றி வழிப்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது இந்த ஸ்லாப் உடைந்து விழுந்தது. மக்கள் அலறினார்கள். நாங்கள் மீட்பு பணிக்காக முயன்றோம். ஆனால் எங்களால் முடியவில்லை. காரணம் எங்களிடம் போதிய உபகரணங்கள் ஏதும் இல்லை. எனவே ஆம்புலன்சுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம். தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இந்த பகுதியில் எந்த ஆம்புலன்சும் வரவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு ஆம்புலன்ஸ் மட்டுமே வந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இங்கிருந்த நிலைமை புரிந்தது. எனவே அவர்கள் மற்ற ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

 மீட்பு பணி

மீட்பு பணி

இப்படியாக மீப்பு பணிகள் தொடங்கின. முதலில் தீயணைப்பு படையினரும், பின்னர் பேரிடர் மீட்பு படையினரும் கடைசியாக ராணுவத்தினரும் மீட்பு பணிக்காக கோயிலுக்கு வந்தனர்" என்று கூறினார். விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தற்போது வரை 12 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். ராணுவம், என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் தொடர்ந்து மீட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது" என இந்தூர் ஆட்சியர் இளையராஜா கூறியுள்ளார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

முன்னதாக இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்டிவிட்ல், "இந்தூரில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. விபத்து தொடர்பாக மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசி நிலைமை குறித்து அறிந்து வருகிறேன். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

 கேள்வி

கேள்வி

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கிணற்கு மேல் தளம் அமைத்து சுமார் 40 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் ஒருமுறை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க இந்த சீலிங்கின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் விபத்திற்கு முக்கிய காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல கிணற்றுக்கு மேல் ஏன் தளம் அமைக்கப்பட்டது? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்றும் அதிகாரிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர். கிணற்றின் சீலிங் உடைந்து 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+