டெல்லியில் பெண் போலீஸின் மகள் மயக்க மருந்து கொடுத்து நண்பர்களால் ஓடும் காரில் பலாத்காரம்
டெல்லி: தெற்கு டெல்லியில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் 23 வயது மகள் தனது ஆண் நண்பர் உள்ளிட்ட 3 பேரால் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தெற்கு டெல்லியில் கான்ஸ்டபிளாக இருக்கும் பெண்ணின் 23 வயது மகள் தனது ஆண் நண்பருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காரில் வெளியே சென்றுள்ளார். காரில் அந்த நபருடன் அவரின் நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்ஸை அளித்துள்ளனர். அதை குடித்த உடன் அந்த பெண் மயங்கிவிட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை காரில் இருந்த 3 ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் அப்பெண்ணை நேரு பிளேஸ் பகுதியில் சாலையோரம் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
சாலையோரம் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்த அவர் தன்னை தனது நண்பரும், அவரின் நண்பர்கள் 2 பேரும் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications