டெல்லியில் 60 வயது சீக்கியரின் தலைமுடியை வெட்டி ஆசிட் வீசிய கும்பல்
டெல்லி: டெல்லியில் 60 வயது சீக்கியரின் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டி அவர் மீது ஆசிட் வீசிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள போகல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் தாப்பார்(60). ஆட்டோரிக்ஷா வைத்துள்ளார். அவர் திங்கட்கிழமை இரவு 7.30 மணி அளவில் போகல் பகுதியில் வந்து கொண்டிருக்கையில் 6 முதல் 7 பேர் வரை கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. அவரின் தலைமுடியை வெட்டி, அவர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியது.
ஆசிட் வீசப்பட்டதில் தாப்பாரின் மார்பகம், வயிறு மற்றும் மர்ம உறுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோமன் நாயக் என்பவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து போகல் பகுதியில் உள்ள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தாப்பாரின் மகள் பிரியா கூறுகையில்,
என் தந்தை வீட்டுக்கு வந்தபோது அவரை யாரோ அடித்து, தலைமுடியை வெட்டி, ஆசிட் வீசியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் தந்தைக்கு யாருடனும் விரோதம் இல்லை. அப்படி இருக்கையில் அவரை யார் தாக்கியது என்று தெரியவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications