தேர்தல் ஆணையத்தில் சசி, தினகரனுக்காக புரோக்கர் வேலை... மாஜி ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா சிக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் சசிகலா, டிடிவி தினகரனுக்காக புரோக்கர் வேலை பார்த்ததாக தமிழக மாஜி ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா சிக்கியுள்ளார். தற்போது டெல்லி போலீசார் பவன் ரெய்னாவை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பவன் ரெய்னா, சந்தீப் சக்சேனா. இதில் பவன் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்டார். சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக பணி புரிகிறார்.

பவன் ரெய்னா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவுக்கான ஆலோசகராக இருந்தவர். முதல்வராக ஓபிஎஸ் பதவி வகித்தபோதும் அப்பதவியில் இருந்தார். தமிழக

பவன் ரெய்னா...

பவன் ரெய்னா...

பவன் ரெய்னாதான் ஜெயலலிதாவுக்கான டெல்லி லாபிகளை செய்து வந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா கோஷ்டிக்கு அவர் புரோக்கராக மாறினார்.

மெயின் புரோக்கர்

மெயின் புரோக்கர்

இவர்தான் சசிகலா, தினகரனின் டெல்லி லாபிக்கு மிக முக்கிய புரோக்கர். சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற இந்த பவன் ரெய்னா மூலமே தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

சிக்கும் சக்சேனா

சிக்கும் சக்சேனா

இதையடுத்து டிடிவி தினகரனுக்கு புரோக்கர் வேலைபார்த்தது குறித்து பவன் ரெய்னாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல் தலைமை தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் துணை தேர்தல் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் சக்சேனாவுக்கும் டெல்லி போலீஸ் குறி வைத்துள்ளதாம்.

விசாரணை தீவிரம்

விசாரணை தீவிரம்

சந்தீப் சக்சேனா, பவன் ரெய்னா இருவரும்தான் சசிகலா கோஷ்டிக்கான டெல்லி லாபியாம். தற்போது சுகேஷ் சந்திரா என்ற 2-ம் கட்ட புரோக்கர் சிக்கிய நிலையில் பவன் ரெய்னா மற்றும் சந்தீப் சக்சேனா இருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi police will send a summon to TamilNadu Govt's Ex Special Representative to Delhi Pawan Raina on the bribe case against TTV Dinakaran.
Please Wait while comments are loading...