மோதிரத்தையே உற்று பார்த்த சாது? பழைய தங்கமா? காலில் பூசப்பட்ட சாம்பலை பார்த்ததுமே ஆடிப்போன டெல்லி
போபால்: வசதிகளும், தொழில்நுட்பமும் பெருக பெருக, மோசடிகளும், குற்ற செயல்களும் அதிகரித்தபடியே உள்ளன.. சோஷியல் மீடியாக்களில் இந்த மோசடிகள் அதிகமாகி கொண்டே வருகின்றன. அதேபோல, முகம் தெரியாதவர்கள் செய்யும் நூதன திருட்டுக்களிலும் பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.. அப்படித்தான் இதோ புதிதாக ஒரு கும்பல் சோஷியல் மோசடி, பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரை சேர்ந்தவர் ககன் ஜெயின். இவர் பட்டய கணக்காளர்.. அதாவது Chartered Accountant.. இவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்..

கால்கள் முழுக்க சாம்பல்
அப்போது ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, 4 பேர் ஜெயினை அணுகினார்கள். பார்ப்பதற்கு சாதுக்கள் போல் டிரஸ் அணிந்திருந்தார்களாம்.. உடம்பெல்லாம் சாம்பல் பூசி, கால்களில் மணிகளை கட்டியிருந்தார்களாம்..
ஜெயினிடம் வந்து, "கங்கை மாயா மற்றும் மகாதேவர் மீது நம்பிக்கை வையுங்கள்" என்று சொல்லி கட்டாயப்படுத்தி, அவரை சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.. பிறகு ஜெயினிடம், "உங்களுடைய தங்க மோதிரம் தேய்ந்துவிட்டது.. அந்த பாதிப்புகளால், உங்களை துரதிர்ஷ்டம் பிடித்துக் கொண்டுவிட்டது. அது உங்களை விட்டு போக வேண்டுமானால், அதனை உடனே கழட்டி தந்துவிடுங்கள்" என்று சொல்லி உள்ளார்கள்.
கழட்டி தரப்பட்ட தங்க மோதிரம்
இதைக்கேட்டு பயந்து போன ஜெயின், உடனே தங்க மோதிரத்தை கழட்டி அவர்களிடம் தந்துள்ளார்.. அந்த மோதிரத்தை வாங்கி கொண்ட 4 பேரும், "இப்போது எங்களை திரும்பி பார்க்காமல் சென்றுவிடுங்கள்.. இல்லாவிட்டால், மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்" என்றார்களாம்.. அப்போதுதான், அந்த 4 பேருமே தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று ஜெயினுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. உடனே போலீசுக்கு ஓடி, புகார் தந்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மஹிபால்பூரில் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஹரித்துவாரில் இதுபோல ஏகப்பட்ட பக்தர்களிடம் பணம், நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது..
பரபரப்பு வாக்குமூலம்
சாமியார்களிடம் ஆசி பெறுவதற்காக பணம், நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பில்லா பொருட்களை பக்தர்கள் கொண்டுவருவதை இந்த 4 பேரும் கவனித்தார்களாம். அதனால்தான், அவகைளை பறிக்க இதுபோன்ற மோசடி திட்டத்தை தீட்டியதாகவும், சாதுக்கள் போல் ஆடை அணிந்து கொண்டு சந்தேகப்படாத தனிநபர்களை இலக்காக வைத்து செயல்பட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளனர்.
இதையடுத்து, வேறு யார் யாரையெல்லாம் இப்படி மோசடி செய்திருக்கிறார்கள் என்ற விசாரணை நால்வரிடமும் நடந்து வருகிறது.. ஜெயினின் அந்த "பழைய" தங்க மோதிரமும் தற்போது மீட்கப்பட்டுவிட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications