80 வயது மாமியாரை அடித்து நொறுக்கும் பெண்: இளகிய மனசுக்காரங்க வீடியோவை பார்க்காதீங்க
டெல்லி: டெல்லியில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் படுத்த படுக்கையாக இருந்த தனது 70 வயது மாமியாரை ஈவு, இரக்கமின்றி அடித்து நொறுக்கிய காட்சி வீட்டில் ரகசியமாக வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதே போன்று சம்பவம் டெல்லியிலும் நடந்துள்ளது. டெல்லியை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்த 80 வயது மாமியாரை கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுக்கிறார்.
வீட்டிற்குள் சென்றால் அடி விழும் என்ற பயத்தில் அந்த மூதாட்டி பால்கனியின் கம்பியை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் தனது மாமியாரை முகத்தில் ஓங்கி அறைகிறார்.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்த பெண் மாமியாரை தாக்கியவரை பார்த்து வயதான பெண்ணை இப்படி கொடுமைப்படுத்துகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா, ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டு திட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடிவாங்கிய மூதாட்டி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications