சைக்கோ கில்லர்.. கரும்பு தோட்டத்தில் அனிதா.. ஒரே மாதிரி கொல்லப்பட்ட 9 பெண்கள்? திணறும் உ.பி. போலீஸ்
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் வெறும் 13 மாதங்களில், 9 பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதுவும் ஒரே மாதிரியான முறையில் இந்த பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. எதற்காக இந்த கொடுமை நடந்தது? அந்த சீரியல் கில்லர் யார் என்று தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் பரேலி பகுதியில், கடந்தாண்டு ஜுன் மாதம், ஒரு பெண்ணின் சடலம், கரும்பு தோட்டத்தில் கிடந்தது.. அந்த பெண்ணின் கழுத்து, சேலையால் நெரிக்கப்பட்டிருந்தது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்திவந்தபோதே, அதே ஜூன் மாதம் அடுத்தடுத்து 2 பெண்களும் கொல்லப்பட்டார்கள்..

கரும்பு தோட்டம்: பிறகு ஜூலையில் ஒருவரும், ஆகஸ்ட்டில் ஒருவரும், அக்டோபரில் ஒருவரும், நவம்பரில் 2 பெண்களும் என அடுத்தடுத்து பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள்.. அனைவருமே ஒரே மாதிரியான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.. அனைவருமே ஒரே மாதிரியான முறையில், கரும்பு தோட்டத்தில் வீசப்பட்டுள்ளனர். அனைவருமே இவர்கள் அணிந்திருந்த புடவையை பயன்படுத்தியே மூச்சுத்திணற வைத்து அப்பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்கள் யாருமே இளம்பெண்கள் கிடையாது.. 40 முதல் 65 வயதுடைய பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.. ஆனால் இவர்களில் யாருமே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உறுதிப்படுத்தியிருக்கிறது. அனைவரது சடலங்களுமே கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
விசாரணை: ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்தையும் இந்த கொலைகள் கலங்கடித்தன.. இதனால், 300 போலீஸ் அதிகாரிகளை கொண்ட 14 குழுக்கள், இந்த சம்பவத்திற்கான விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டன.. ஆனால், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, இந்த ஜூன் மாதம் வரையில், தொடர் கொலைகள் சம்பவம் எதுவுமே நடக்கவில்லை..
இதனால் உள்ளூர்வாசிகளும், போலீசாரும் லேசாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால்,ஜூலை 2ம் தேதி, புஜியா ஜாகிர் பகுதியை சேர்ந்த அனிதா என்பவர், தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க போன அனிதா, வீட்டுக்கு மறுபடியும் திரும்பவில்லை..
அனிதா: இதனால் அனிதாவை, அவரது குடும்பத்தினர் தேடிவந்தபோது, அதே நாளில், அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனால், போலீசார் விரைந்து சென்றபோது, அனிதாவும் சேலையால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு, கரும்பு தோட்டத்தில் வீசியிருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
பிறகு இதுகுறித்த விசாரணை அந்த பகுதி மக்களிடம் நடத்தப்பட்டது.. அப்போது 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் சொன்னார்கள்.. உடனே அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, குற்றவாளியின் மாதிரி ஓவியம் வரையப்பட்டது. இந்த மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை போலீசார் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
தொடர் கொலைகள்: இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மனுஷ் பரீக் சொல்லும்போது, "இந்த தொடர் கொலைகள் வழக்கில், பல காவல் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.. ரோந்து பணிகள் நடக்கின்றன.. சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன..
ஆனால், இந்த கொலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இந்த கொலைகளுக்குப் பின்னணியில் ஒரு சீரியல் கில்லர் இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது.. இப்போது அனிதா கொலையில் அந்த சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.. எனவே, கொலையாளியை விரைவில் கண்டுபிடிப்போம்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீரியல் கில்லர்: 13 மாத கால இடைவெளியில் ஒரே வயதுடைய 9 பெண்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலைகளை எல்லாம் சீரியல் கில்லர் செய்தாரா என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளதால், உத்தரபிரதேசமே கதிகலங்கி கிடக்கிறது.
இதுகுறித்து கூடுதல் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.. எல்லா கொலைகளுமே, சாயங்கால நேரத்தில் மட்டுமே நடந்துள்ளதாம்.. அதாவது, மாலை வேளையில் வயல்களில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும்போது, அந்த பெண்களை குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.. பெரும்பாலோனோர் கூலி தொழிலாளிகள் ஆவர்.. இவர்கள் அனைவருமே அவர்கள் அணிந்திருக்கும் சேலை அல்லது துப்பட்டாவில் கழுத்தை நெரித்து, கொல்லப்பட்டுள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications