Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட கிட்ட போய் "சில்மிஷம்" தந்த போலீஸ்காரர்.. அதுவும் பைக்கிலேயே.. அந்த பொண்ணு பாவம்.. இதோ வீடியோ

இளம்பெண்ணுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை தந்த போலீஸ்காரரின் வீடியோ வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

போபால்: நைட் நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பார்த்து அரசியல் கட்சிகள் ஆவேசமாகி உள்ளன.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... நேற்றைய தினம் மகளிர் தினம் இந்த மத்திய பிரதேசம் மாநிலம் முதல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.. இந்த போலீஸ்காரர்களில் ஒருவர்தான், பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

 சில்மிஷம்

சில்மிஷம்

இரவு நேரத்தில் ஒரு பெண், அங்கே தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்போது பைக்கில் சென்ற போலீஸ்காரர், இந்த பெண்ணை பார்த்ததும், அருகில் வந்து பைக்கை நிறுத்துகிறார்.. பைக்கிலேயே உட்கார்ந்துகொண்டு, பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து கொள்கிறார்.. பிறகு, அவரை பிடித்து இழுத்து, பாலியல் சீண்டலிலும் ஈடுபடுகிறார்.. விருப்பமில்லாமல் அந்த பெண்ணை தொடுவதும், அதற்கு அந்த பெண் பதறுகிறார்.. பிறகு, அந்த பெண், போலீஸ்காரரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வேகமாக நடந்து செல்கிறார்.. ஆனால், போலீஸ்காரர் விடாமல் பின்னாடியே அந்த பெண்ணின் பின்னால் பைக்கிலேயே துரத்தி செல்கிறார்..

 அங்கங்கள்

அங்கங்கள்

இவை யாவும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.. அங்கு நடப்பதை எல்லாம், தூரத்தில் நின்றுகொண்டு, ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசார், பெண்ணை இழுத்து பாலியல் தொந்தரவு தந்த வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இந்த விவகாரம் அரசியல் கட்சி தலைவர்கள் வரை சென்றுவிட்டது.. அவர்களின் பார்வையிலும் வீடியோ பட்டுவிட்டது..

 வேட்டைகள்

வேட்டைகள்

இதையடுத்து, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல்துறையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது... "பாஜக ஆட்சியில், போலீஸ்காரர்களே வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டனர்... போபாலில் உள்ள அல்பனா டாக்கீஸ் பக்கத்தில், இரவு நேரத்தில், தனிமையில் நின்ற பெண்ணிடம், போலீஸ்காரர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது... ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது" என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா காட்டமாக தெரிவித்துள்ளார்.

 டிஸ்மிஸ் + சஸ்பெண்ட்

டிஸ்மிஸ் + சஸ்பெண்ட்

ஹனுமங்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் அல்பனா டாக்கீஸ் அருகே இந்தச் சம்பவம் நடத்திருப்பதாகத தெரியவந்துள்ளது. உலக மகளிர் தினத்தன்று நடந்ததாக வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய போலீஸே இப்படி செய்யலாமா? இந்த காவலரை, வெறுமனே சஸ்பெண்ட் செய்துவிடாமல், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+