கர்நாடகாவில் வழக்கம்போல ரயில்கள் இயக்கம்- மாண்டியாவில் மட்டும் போராட்டம்!
பெங்களூரு: கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தாலும் அம்மாநிலத்தில் ரயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன. மாண்டியாவில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சித்த கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கன்னட அமைப்புகள் வன்முறையில் இறங்கியுள்ளன. கடந்த 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

துணை ராணுவம் குவிப்பு
அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று ஒரே நாளில் 100க்கும் அதிகமாக தமிழக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

வாட்டாள் அறிவிப்பு
இதனிடையே இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன. பெங்களூருவில் மைசூர் வங்கி சர்க்கிளில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

மாண்டியாவில் மட்டும்...
இன்று காலை 6 மணி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டியாவில் மட்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சிலர் முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வழக்கம் போல...
பொதுவாக கர்நாடகா முழுவதும் ரயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பயணிகள் அச்சமடையத் தேவையில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications