Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'திரிஷ்யம்' படத்தை பார்த்து குற்றங்களை மறைக்கும் தைரியம் வந்தது: 'பெங்களூர் கோகுல்' பரபர வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை அம்பலம்

கொலை அம்பலம்

போலீசாரிடம் கோகுல் அளித்த வாக்குமூலத்தின்போது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என்று நாடகமாடிய தகவலும் அம்பலமாகிவிட்டது. திருச்சூரில் பள்ளி, கல்லூரி படித்த காலகட்டத்தில் கோகுலுக்கும், கரோலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கரோலின் மேற்படிப்புக்காக திருச்சிக்கும், கோகுல் டெல்லிக்கும் சென்றதால் இருவருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

இந்நிலையில், டெல்லியில் பழக்கமான அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து பணிக்காக பெங்களூர் வந்தார் கோகுல். இத்தம்பதிக்கு 1 மகள் உள்ள நிலையில், அனுராதா வேலைபார்த்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவனோடு கள்ளக்காதலுக்கு ஆட்பட்டார். இதை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டார் கோகுல்.

மீண்டும் காதல்

மீண்டும் காதல்

இந்நிலையில்தான், கோகுலுக்கு, கரோலின் தொடர்பு பேஸ்புக் மூலம் மீண்டும் கிடைத்துள்ளது. கரோலினுக்கு சாஜு ஜோஸ் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதையும் அறிந்துகொண்டார். இதையடுத்து அனுராதாவை கொலை செய்துவிட்டு, சாஜு ஜோசை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்கு அனுப்பிவிட்டு கரோலினை அடைய திட்டமிட்டார் கோகுல்.

அடித்து கொலை

அடித்து கொலை

ஜூலை 27-28ம் தேதி அதிகாலை 2 மணியளவில் அனுராதாவை வீட்டிலுள்ள விநாயகர் சிலையால் அடித்து கொன்றுவிட்டு கீழே விழுந்து தலையில் அடிபட்ட விபத்தில் அனுராதா இறந்துவிட்டார் என நாடகமாடியுள்ளார். அதேபோல, சாஜு ஜோஸ் பெயரில் புதிதாக ஒரு செல்போன் மற்றும் சிம்கார்டை வாங்கி அதில் இருந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் கோகுல்.

போலீஸ் காவல்

போலீஸ் காவல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலுக்கு செப்டம்பர் 21 வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. எனவே போலீசார் தங்கள் பாதுகாப்பில் வைத்து கோகுலிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்போர்ட் மிரட்டலுக்காக ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கான பலமான சட்டப்பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை வழக்கும் தனியாக பதிவு செய்யப்பட்டது.

போலி ஐடிகள்

போலி ஐடிகள்

போலீஸ் விசாரணையில் உள்ள கோகுல் விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கோகுல் கூறியதாக, பெயர் தெரிவிக்கவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனது கல்வி இணையதளத்தில் எப்படி செயல்படுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்திருந்தது. சொந்தமாக லேப்டாப் இருப்பதால், பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் கூட இணையதளத்தில் எதையாவது செய்துகொண்டிருப்பேன்.

மனைவியின் கள்ளக்காதல்

மனைவியின் கள்ளக்காதல்

இப்படித்தான், எனது மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடிக்க இணைய உதவியை நாடினேன். பாபா என்ற பெயரில் ஒரு மெயில் ஐடியையும், ஆஷா என்ற பெயரில் மற்றொரு ஐடியையும் உருவாக்கி, ஆன்மீக பலன் சொல்வது போல ஏமாற்றி, மனைவியின் கள்ளக்காதல் பற்றியும், அவர் காதலனுடன் இருக்கும் நிர்வாண படங்களையும் சேகரித்தேன்.

திட்டமிட்ட கொலை

திட்டமிட்ட கொலை

ஆஷா இ-மெயில் ஐடியில் இருந்து எனது மனைவிக்கு அனுப்பிய மெயிலில், சம்பவத்தன்று இரவு, மதுபோதையில் இருக்க அறிவுறுத்தியிருந்தேன். அப்படி இருந்தால்தான் பூஜை பலிக்கும் என்று கூறியிருந்தேன். எனது பேச்சை கேட்டு அனுராதாவும், அரை பாட்டில் விஸ்கி குடித்திருந்தார். நான் சிலையால் தலையில் அடித்து அவரை கொலை செய்தேன்.

திரிஷ்யம் கொடுத்த தைரியம்

திரிஷ்யம் கொடுத்த தைரியம்

கொலை வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்துவிட முடியும் என்ற தைரியத்தை எனக்கு திரிஷ்யம் திரைப்படம் வழங்கியது. அந்த படத்தில், கொலையை பல்வேறு ஆதாரங்களையும், நிகழ்வுகளையும் உருவாக்கி ஹீரோ மறைத்து போலீசாரிடமிருந்து தப்பிவிடுவார். அதேபோல நாமும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் தப்பிவிடலாம் என்று நம்பினேன்.

சிம்கார்டு ஐடியா

சிம்கார்டு ஐடியா

திரிஷ்யம் படத்தில் வரும் ஒரு காட்சியில், கொலையாகும் நபரின் சிம்கார்டை புதிதாக ஒரு போனில் பொருத்தி, அதை லாரியில் போட்டு ஹீரோ அனுப்புவார். அந்த செல்போன் பல நகரங்களுக்கு பயணிக்கும் என்பதால் நம்பரை டிரேஸ் செய்யும்போது, போலீசாருக்கு குழப்பம் ஏற்படும். இதை பார்த்துதான், நானும், ஒரு சிம்கார்டையும், போனையும் சாஜு பெயரில் வாங்கினேன்.

சிக்கியது இப்படி

சிக்கியது இப்படி

ஏர்போர்ட்டுக்கு மிரட்டல் விடுத்ததும் அந்த செல்போனில் இருந்துதான். சாஜுவும், நானும் ஒரே அப்பார்ட்மென்ட் என்பதால், செல்போனை டிரேஸ் செய்யும்போது எங்கள் பகுதியை போலீசார் சுற்றி வளைப்பார்கள், சாஜுவை கைது செய்வார்கள் என்று நினைத்தேன். அதேபோலத்தான் நடந்தது. ஆனால், நான் வாட்ஸ்சப்பில் அனுப்பிய மெசேஜ் எனது வீட்டு வை-பை இணையதள கனெக்ஷனை பயன்படுத்தி போயுள்ளது. இதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.

ஆதாரத்துக்கு பதில் சேதாரம்

ஆதாரத்துக்கு பதில் சேதாரம்

திரிஷ்யம் படத்தில் அடுத்தடுத்து ஹீரோ பல ஆதாரங்களை தனக்கு ஆதரவாக உருவாக்குவார். அதேபோலத்தான் நானும் போலி ஐடிகள், போலி சிம்கார்டு, நாடக கொலை, பிஷப் எழுதுவதை போல சாஜுவுக்கு கடிதம் எழுதியது போன்ற ஆதாரங்களை உருவாக்கினேன். ஆனால் சினிமாவை போல நிஜ வாழ்க்கை இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இவ்வாறு கோகுல் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படத்தில் தனது கற்பை காப்பாற்றுவதற்காக கதாநாயகி கொலை செய்துவிடுவார். குடும்பத்தை போலீசாரிடமிருந்து தப்புவிக்க ஆதாரங்களை உருவாக்குவார் ஹீரோ. இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு, வெளியாகி சக்சஸ் ஆகியுள்ளது. கோகுல் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், மலையாள, திரிஷ்யம் படத்தைதான் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவிலும் சம்பவம்

கேரளாவிலும் சம்பவம்

கேரளாவில் உள்ள நிலம்பூர் என்ற இடத்தில் ஒரு பெண் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கைதான இரு வாலிபர்களும், தாங்களும் திரிஷ்யம் படம் பார்த்துதான் கொலை செய்ததாக தெரிவித்திருந்ததனர். இதையடுத்து படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் "ஒரு சாமானியன் போராட்டத்தை படமாக எடுத்திருந்தேன். தப்பான காரியங்களுக்கு அந்த படத்தை பயன்படுத்தாதீர்கள்" என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+