சுனந்தா மரணம் : அதிகப்படியான ‘மன உளைச்சல்’ மருந்து தான் காரணமா?
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணத்தின் பிண்ணனியில், மன உளைச்சல் காரணமாக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளே இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
பாகிஸ்தான் பத்திரிக்கையாளரோடு காதல் என மத்திய அமைச்சர் சசிதரூர் மீது குற்றஞ்சாட்டிய அவரது மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் மரணமடைந்தார். நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையின் முடிவில் அவரது மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளிவர இன்னும் இரண்டு தினங்களுக்கு மேலாகும் எனச் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மனஉளைச்சலை தடுப்பதற்கான மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டது கூட அவருடைய மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் பிரேத விசாரணையின் இறுதி அறிக்கை இன்னும் 2 நாட்களில் வந்தபின்தான் உண்மையான காரணம் தெரியவரும் என்று, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் துணை கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சுனந்தா தரூரின் மகன் மற்றும் சகோதரர் மற்றும் சசிதரூரின் இரு வேலைக்காரர்கள் ஆகியோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டது. சசிதரூரிடம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வாக்குமூலம் பதிவு செய்ய இருந்தோம். ஆனால், சசிதரூரும், அவருடைய குடும்பத்தினரும் அரித்துவார் செல்வதாக தெரிவித்ததால், திங்கட்கிழமை அன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications