அனல் பறக்கும் ஜார்க்கண்ட் தும்ரி இடைத் தேர்தல்- 'நண்பேன்டா' வாக பிரசாரம் செய்யும் "இந்தியா" அணி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரும் மாநில அமைச்சருமான பேபி தேவிக்கு ஆதரவாக "இந்தியா" கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி; மேற்கு வங்கம் துப்குரி: உ.பி. கோசி: உத்தரகாண்ட் பாகேஷ்வர்; கேரளா புதுப்பள்ளி; திரிபுராவின் போக்சா நகர், தன்பூர் ஆகிய 7 தொகுதிகளில் செப்டம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி வேட்பாளராக மாநில அமைச்சர் பேபி தேவி களமிறக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான ஜகர்நாத் மகாதோவின் மனைவி பேபி தேவி. 2005-ம் ஆண்டு முதல் கிரிடித் மாவட்டத்தில் தொடர்ந்து வென்று வந்தவர் ஜகர்நாத் மகாதோ. இவருக்கு ஆதரவாக "இந்தியா" கூட்டணியின் காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர் பேபி தேவிக்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஏஜேஎஸ்யூ கட்சியின் யசோதா தேவி களமிறக்கபப்ட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு ஜகர்நாத் மக்தோ 71,128 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏஜேஎஸ்யூ கட்சியின் யசோதா தேவி 36,480 வாக்குகள் பெற்றார். அதேநேரத்தில் பாஜக களமிறக்கிய பிரதீப் ஷாகு 36,013 வாக்குகள் பெற்றார். இம்முறை ஏஜேஎஸ்யூ கட்சியும் பாஜகவும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக மோதுகிறது. இதனால் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications