For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: கிரிக்கெட் சங்க நிதி மோசடி தொடர்பாக, பரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது.

ED attaches Rs 11.86 cr assets of Farooq Abdullah

அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா.
அப்போது கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ..43.69 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பரூக் மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

"இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி" அமைச்சர் கடிதத்தை படித்து பாருங்கள்- தமிழில் மோடி ட்வீட்

இந்த நிலையில், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்கள் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் உள்ளன. 2 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு வணிக கட்டிடம், 3 மனைகள் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஆகும்.

இந்த சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு ரூ.11.86 கோடி என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ..60 கோடி முதல் ரூ.70 கோடி வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பரூக் அப்துல்லா மகனான, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பரம்பரை சொத்து என்று அவர் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
The ED has attached assets worth Rs 11.86 crore of former Jammu and Kashmir chief minister Farooq Abdullah and others in connection with its money laundering probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X