நிலக்கரி சுரங்க ஊழல் புகார்.. சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சல்லடை போடும் அமலாக்கத்துறை!
சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
ராய்ப்பூர்: நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு சொந்தமாக 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகேல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே பிப்.24 முதல் பிப்.26 வரை 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சோதனை
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், சத்தீஸ்கர் மாநில கட்டுமான வாரிய தலைவர் சுசில் சன்னி அகர்வால், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐஏஎஸ் அதிகாரிகள் சவுமியா சவுராசியா, சூர்யகாந்த் திவாரி, சமீர் விஷ்னோய், தொழிலதிபர் சுனில் அகர்வால் என மொத்தம் 9 பேருக்கு சொந்தமான 12க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திடீர் ரெய்டு ஏன்?
நிலக்கரி சுரங்க முறைகேடு மூலம் பலனடைந்தவர்கள் என கருதப்படுபவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் நிலக்கரியில் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.25 வீதம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூபேஷ் பாகேல் கண்டனம்
அமலாக்கத் துறையினரின் இந்த சோதனைக்கு முதலமைச்சர் பூபேந்திர பாகேல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றி அடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் பாடுபட்டு வருகிறார்கள். அவர்களின் மன உறுதியை குலைக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜகவின் காழ்ப்புணர்ச்சி
ஆனால், இதுபோன்ற சோதனை மூலம் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியினரை சோர்வடையச் செய்துவிட முடியாது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் அதானி ரகசியங்கள் வெளிவந்ததை பாஜக ரசிக்கவில்லை. இதனால் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி பொருளாளர் ராம் கோபால் அகர்வால் ரூ.52 கோடி பெற்றதற்கான ஆவண ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications