ஸ்டண்ட் செய்யப் போய்.. ஹாஸ்டலின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினியரிங் மாணவர் பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஸ்டண்ட் செய்யும் ஆசையில் கல்லூரி ஹாஸ்டலின் ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவிக் குதிக்க முயன்ற 19 வயது என்ஜினியரிங் மாணவர், கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்பசீராபாத்தில் உள்ள நரசிம்மா ரெட்டி என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாய் கிருஷ்ணா (19). கம்மம் பகுதியைச் சேர்ந்த இம்மாணவர் கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சாய் தனது நண்பர்களுடன் சேர்ந்து 3வது மாடியில் இருந்து அருகில் இருந்த மற்றொரு மாடிக்கு தாவிச் செல்ல முற்பட்டுள்ளார். சாயின் நண்பர்கள் சரியாக தாவிச் சென்று விட, எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார் சாய்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை, உடனடியாக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மாணவர்கள் குறும்பாக ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவி ஸ்டண்ட் செய்ய முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications