For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையும் களவுமாக சிக்கிய ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆந்திராவில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில கல்விதுறை முதன்மை செயலாளார் உத்தரவிட்டார்.

கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா, ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

English teacher can’t read English, suspended

அப்போது சர்தார் பாபு என்ற ஆங்கில் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தி கொண்டிருந்தார். திடீரென வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத்தினார்.

இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவிடம் ஆங்கிலத்தில் உரையாடினார். ஆங்கிலத்திலேயே பதிலளிக்க கேட்டுக்கொண்டார். ஆனால் பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திணறினார். இதனால் கோபமடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

English summary
An English teacher dumb founded the Principal Secretary of Education Department while the latter conducted a surprise inspection at of Ekapadampalli government Upper Primary School in Ananthapuram district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X