இந்த தொழில் அதிபரின் ட்வீட்டை ரீட்வீட் செய்தால் ஒரு ஏழையின் வயிறு நிறையும்
ஹைதராபாத்: தொழில் அதிபர் கேசவ் ரெட்டியின் ட்வீட்டை ரீட்வீட் செய்தால் அவர் ஒவ்வொரு ரீட்வீட்டுக்கும் ஒரு ஏழைக்கு உணவு அளிப்பார்.
ஜிவிகே குழுமத்தின் தலைவரான ஜி.வி. கிருஷ்ணா ரெட்டியின் பேரன் ஜி.வி. கேசவ் ரெட்டி. தொழில் அதிபர். இந்தியன் என்ற ஆன்லைன் ஆடை நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>1000th post special. For EVERY Retweet of this post, I'll feed ONE homeless person. This is my gift for all the love you guys have given me!</p>— G V Keshav Reddy (@GVKjunior) <a href="https://twitter.com/GVKjunior/statuses/487806999589949440">July 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>யாராவது எங்களிடம் ஒரு சட்டை வாங்கினால் அதே விலை மற்றும் தரத்திலான ஒரு சட்டை ஆதரவற்ற ஒருவருக்கு அளிக்கப்படும் என்று கேசவ் ரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
1000வது ட்வீட் ஸ்பெஷலானது. இதை ரீட்வீட் செய்தால் ஒவ்வொரு ரீட்வீட்டுக்கும் நான் ஒரு ஆதரவு இல்லா நபருக்கு உணவு வழங்குவேன். என் மீது நீங்கள் காண்பித்துள்ள அன்புக்கு எனது பரிசு என்று தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பலரும் அவரது ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளனர். நல்ல காரியத்திற்காக ரீட்வீட் செய்கிறோம் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறோம் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.