சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது.. தனித்து தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா!
கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார். ஐந்து நீதிபதிகளில் அவர் தனி தீர்ப்பளித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
[சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை.. கேரள அரசு அறிவிப்பு ]
4:1 என்ற கணக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிபதி இந்து மல்ஹோத்ரா சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அவர் தனது தீர்ப்பில், இது மத நம்பிக்கை சார்ந்தது. இதில் பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும். பெண்களுக்கு கோவிலில் வழிபட, இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது.
ஆனால் சபரிமலை கோவில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது. இதற்கும் பெண் வழிபாட்டு முறைக்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆனால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர் ஆகிய நான்கு பேர் பெண்களை அனுமதிக்கும்படி தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications