ரூ.24 கோடி ஜவுளியை தீவைத்து எரித்த மாஜி அக்கவுண்டண்ட்.. ரூ.10,000 சம்பளம் பாக்கியால் ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை வழங்காமல் இடித்தடித்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு பாடம் புகட்டுவதற்காக முன்னாள் ஊழியரான அக்கவுண்டண்ட் ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிக்கு தீவைத்து சென்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் சூரத்தில் சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த 9 ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் அங்குள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

textile

அனைத்தும் ஜவுளி கடை என்பதால் தீ அடுத்தடுத்து வேகமாக பரவியது. தொடர்ந்து கடைகள் இருந்ததால் ஒவ்வொரு கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது. சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீயில் 4 பேருக்கு சொந்தமான 17 கடைகளில் இருந்த ஜவுளிகள் முற்றிலுமாக எரிந்தன. இந்த ஜவுளி கடைகளில் இருந்த ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தீயில் கருகி நாசமாகின. அதன்படி ஹனுமன் பிரசாத் ஜவார் என்பவருக்கு சொந்தமான ரூ.6 கோடி ஜவுளி, அபிசேக் சோனி என்பவருக்கு சொந்தமான ரூ.2 கோடி, அனுராக் ஜாலன் என்பவருக்கு சொந்தமான ரூ.12 கோடி ஜவுளி மற்றும் ஹரி பிரசாத் ஜாவர் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி ஜவுளி என்று ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிகள் நாசமாகின.

இதனால் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். தனித்தனியாக வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருநபர் தனது முகத்தில் துணியை சுற்றி கொண்டு சந்தேகப்படும் படியாக நடமாடியது தெரியவந்தது. அதோடு அவர் தான் தீவைத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியை சேர்ந்த வினோத் சாவ்லி (வயது 33) என்பதும், அவர் தீவிபத்தில் ஜவுளி எரிந்த ஷனுமன் பிரசாத் ஜவாரின் கடையில் அக்கவுண்டண்ட் ஆக பணியாற்றி சமீபத்தில் வேலையை விட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது ஓணரை பழிவாங்க ஜவுளிக்கடைக்கு தீவைத்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி வினோத் சாவ்லி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியுள்ளதாவது: ''வினோத் சாவ்லி சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில் உள்ள ஹனுமன் பிரசாத் ஜார் ஜவுளிக்கடைகளி்ல கடந்த கடந்த ஏப்ரல் மாதம் பணிக்கு சேர்ந்தார். அக்கவுண்டண்ட் ஆக பணியாற்றினார். மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சீனியர் அக்கவுண்டண்ட் மற்றும் ஓணர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் தனது வேலையை விட்டு சென்றார்.

வினோத் சாவ்லி வேலையை விட்டு சென்றதால் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை பெண்டிங் வைத்தனர். அதனை கேட்டு வினோத் சாவ்லி பலமுறை கடைக்கு சென்றார். ஆனால் ஓணர் அவரது ரூ.10 ஆயிரம் சம்பளத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஓணருக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார். பணத்தின் அருமையை ஓணருக்கு காண்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி கடந்த 8 ம் தேதி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி அதனை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து கொண்டு ஹனுமன் பிரசாத் ஜவாரின் ஜவுளிக்கடைக்கு சென்றார். பிறகு குடோனில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து சென்றார்.

தனது உரிமையாளரின் கடையை மட்டுமே தீவைத்து எரிக்க அவர் நினைத்தார். ஆனால் அந்த தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து போனது. இந்த சம்பவத்துக்கு பிறகு தன்னை போலீசார் தேடுவதை அறிந்த அவர் ராஜஸ்தானில் உள்ள காதுஷயம் கோவிலுக்கு சென்றார். பிறகு அயோத்திக்கு னெ்றார். மொத்தம் 13 ஆயிரத்தை கையில் எடுத்து சென்றார். இந்த பணம் மொத்தமாக காலியானதால்12 நாட்கள் கழித்து அவர் சூரத்துக்கு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.'' என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+