Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் பயங்கரம்.. முன்னாள் கடற்படை அதிகாரியை.. பீஸ் பீஸாக வெட்டிய மனைவி.. என்னங்க நடக்குது?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது காதலியை கொன்று உடலை பல துண்டுகளாக வெட்டிய சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், கொல்கத்தாவில் அதேபோன்ற பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஒரு முன்னாள் கடற்படை அதிகாரியை கொலை செய்து அவரது உடலை மனைவி மற்றும் மகனே சேர்ந்து பல துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட சம்பவம் போலீஸாரையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முதலில் தங்களுக்கு எதுவும் தெரியாது என நாடகமாடிய தாய் மற்றும் மகனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'டெல்லி மாடல்' பயங்கரம்..

'டெல்லி மாடல்' பயங்கரம்..

டெல்லியில் தன்னுடன் லிவ்விங் உறவில் இருந்த தனது காதலியான சாரதாவை அப்தாப் என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் கொலையுடன் நிறுத்தாமல், சாரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அதை ஃப்ரிட்ஜில் வைத்து அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்திய அப்தாப்பின் செயல் குரூரத்தின் உச்சமாக இருந்தது. தற்போது அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது அப்தாப் கூறும் தகவல்கள் போலீஸாரையே மிரளச் செய்து வருகின்றன.

கொல்கத்தாவில் 'ஷாக்'..

கொல்கத்தாவில் 'ஷாக்'..

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நம்மை விட்டு விலகாத நிலையில், கொல்கத்தாவில் இதே பாணியில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பரூய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஜ்வால் சக்கரவர்த்தி (55). இவருக்கு ஷ்யாமளி (50) என்ற மனைவியும், ராஜு (27) என்ற மகனும் உள்ளனர். இந்தியக் கடற்படையில் பணிபுரிந்து வந்த உஜ்வால் சக்கரவர்த்தி, விருப்ப ஓய்வு பெற்று அண்மையில்தான் சொந்த ஊர் திரும்பினார். பின்னர் அங்குள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக (செக்யூரிட்டி ஆபிசர்) அவர் வேலைக்கு சேர்ந்தார்.

குடிப்பழக்கம் - தகராறு..

குடிப்பழக்கம் - தகராறு..

இதனிடையே, உஜ்வால் சக்கரவர்த்திக்கு சமீபகாலமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடனும், மகனுடனும் அவர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினையும் ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, மகன் ராஜுவை வீட்டை விட்டு வெளியேறுாறு கூறி உஜ்வால் பிரச்சினை செய்து வந்துள்ளார்.

தாயும் மகனும் சேர்ந்து..

தாயும் மகனும் சேர்ந்து..

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி மாலை வழக்கம் போல மது அருந்திவிட்டு மனைவி, மகனுடன் சண்டை போட்டுள்ளார் உஜ்வால். ஒருகட்டத்தில், மனைவி ஷ்யாமளியை சரமாரியாக அடிக்க தொடங்கினார் உஜ்வால். இதனால் ஆத்திரமடைந்த மகன் ராஜு, தந்தை உஜ்வால் சக்கரவர்த்தியை அடித்து கீழே தள்ளினார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். உஜ்வால் இறந்ததும் பயந்துபோன ராஜுவும், ஷ்யாமளியும் உஜ்வாலின் உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தனர். இதையடுத்து, ராஜு அரத்தை எடுத்து தந்தை உஜ்வாலின் தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டினார். பின்னர் தாயும், மகனும் சேர்ந்து அந்த உடல் பாகங்களை பாலித்தீன் கவர்களுக்குள் போட்டு 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் குளத்திலும், புதர்களிலும் வீசினர்.

நாடகம் - கைது..

நாடகம் - கைது..

இதையடுத்து, அவர்கள் இருவரும் தங்கள் பகுதி காவல் நிலையத்துக்கு அதிகாலை சென்று உஜ்வாலா வீடு திரும்பவில்லை என புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் உஜ்வாலை தேடி வந்தனர். அப்போது அந்தக் குளத்தில் இருந்து உஜ்வாலின் தலை மிதந்து மேலே வந்தது. அங்கு சென்று பார்த்த போலீஸார், அது உஜ்வால் சக்கரவர்த்தி என அடையாளம் கண்டனர். இந்நிலையில், இந்த தகவலை அவரது மனைவி, மகனுக்கு தெரிவித்த போது அவர்கள் முகத்தில் அதிர்ச்சி இல்லாததை கண்டு போலீஸார் சந்தேகித்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நடந்த உண்மைகளை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+