மந்திரவாதியின் முரட்டு பிடி.. டுபாக்கூரிடம் சிக்கி தவித்த ரஜிதா.. கடைசியில் நேர்ந்த துயரம்.. வீடியோ!
பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை தாக்கி கொன்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்
தெலுங்கானா: டுபாக்கூர் மந்திரவாதியின் முரட்டு பிடியில் இருந்து இளம்பெண் ரஜிதாவால் மீள முடியவில்லை.. பேய் ஓட்டுவதாக சொல்லி ரஜிதாவை சித்ரவதை செய்ததில், அந்த பெண் இறந்தே விட்டார்!
டெக்னாலஜி நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னும் சிலர் மூடத்தனங்களில் திளைத்து வருகின்றனர்.. படிப்படிறிவில்லாத எத்தனையோ வடமாநிலங்களின் குக்கிராமங்களில் இதன் காரணமாகவே ஏராளமான வன்முறைகள் நடந்து வருகின்றன.
இப்போது தெலுங்கானாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மண்சிரியாளா மாவட்டத்தில் உள்ளது குண்டாராம்.. இங்கு வசித்து வரும் தம்பதி மல்லேஷ் - ரஜிதா.. இவர்கள் 2 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது.. உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மாசத்தில் ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

அம்மா
ஆனால், இந்த கல்யாணம் மல்லேஷின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை... அதனால், மருமகள் ரஜிதாவுக்கு ஏராளமான கொடுமைகளை செய்து வந்தார்.. விரும்பி கல்யாணம் செய்துகொண்டதாலும், குழந்தைக்காகவும் அனைத்தையும் ரஜிதா பொறுத்து கொண்டார்.

மாமியார்
இந்நிலையில், மருமகளுக்கு பேய் பிடித்திருக்கிறது ஒரு அபாண்டத்தை கிளப்பி விட்டார் மாமியார்.. இதை ஊர் முழுக்க நம்ப வைத்தார்.. பிறகு ஒரு டுபாக்கூர் மந்திரவாதியை அழைத்து வந்து, பேய் ஓட்டுவதாக கூறி சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார்.. ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதால்தான் இப்படி அடிக்கிறார்கள் என்பதை அறிந்து அக்கம்பக்கத்தினரும் இதை பெரிசா கண்டுகொள்ளவில்லை

மந்திரவாதி
ரஜியா அந்த முரட்டு மந்திரவாதி அடித்த வலி தாங்க முடியாமல் கதறினார்.. கொஞ்ச நேரத்தில் அவர் சுயநினைவின்றி மயங்கியும் விழுந்துவிட்டார். பின்னர் இளைஞரின் தாக்குததால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுயநினைவை இழந்தார்.இதையடுத்து, ரஜிதாவை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதித்தனர்.

உயிரிழப்பு
உடம்பெல்லாம் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரஜிதா பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதாக கூறி சித்தரவதை செய்த மந்திரவாதி யாரோ ஒரு இளைஞராம்.. அவருக்கு உதவியாக ரஜிதாவின் சித்தப்பாவே இருந்திருக்கிறார்.. இப்போது மொத்த பேர் மீதும் விசாரணை பாய்ந்துள்ளது.

அதிர்ச்சி
இதனை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. இன்னும் இதுபோன்ற கொடியவர்களை என்னதான் செய்வது?
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications