ராஜஸ்தான் அரசை கவிழ்க்க மீண்டும் முயற்சி நடக்கிறது.. முதல்வர் அசோக் கெலாட் ஷாக் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மற்றொரு முயற்சி நடைபெறக் கூடும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு துவக்கத்தில், துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியால் இந்த அரசு கவிழும் நிலை உருவானது. ஒருவழியாக, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.

Expecting another attempt to topple Congress govt: Rajasthan CM Ashok Gehlot

இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 34 நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் தங்கவைக்க வேண்டிய நிலை உருவானது என்பதை விவரித்தார்.

அஜய் மேக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் அவினாஷ் பாண்டே ஆகியோர் இங்கு வந்து கிளர்ச்சி எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்தார்கள், அதுதான் அரசை காப்பாற்றியது என்றும் கெலாட் கூறினார்.

ஐந்து அரசுகள் இதுவரை வீழ்த்தப்பட்டதாகவும், ஆறாவதாக மற்றொரு மாநிலமும் அதே கதியை சந்திக்கும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியதாக, அசோக் கெலாட் அப்போது குறிப்பிட்டார்.

கெலாட்டின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான குலாப் சந்த் கட்டாரியா, கூறுகையில், காங்கிரசுக்குள் மோதல்கள் அதிகரித்து, மாநில அரசு கவிழும் நிலை உருவாகி வருகிறது. அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, காங்கிரஸ் தலைமை, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தனர், ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அதனால்தான் தங்கள் அரசு, கவிழும் என்ற அச்சம் அவர்களை இப்படி பேசச் செய்கிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+