For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் 45 தொகுதிகளில் ஜெயிப்போம், ஊழலற்ற மாநிலம் ஆக்குவோம்... கெஜ்ரிவால் உறுதி!

Google Oneindia Tamil News

டெல்லி: நடைபெற உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் 45 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

கடந்தாண்டு நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி அங்கு ஆட்சி அமைத்தது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

ஒன்றரை மாத ஆட்சிக்குப் பின் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

இந்நிலையில், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், டெல்லி சட்டசபையைக் கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த நேற்று குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதம் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது:-

முழுமையான ஆட்சி...

முழுமையான ஆட்சி...

டெல்லி சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு 45 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். அதன் பின்பு ஆம் ஆத்மி ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தும்.

ஊழலற்ற மாநிலம்...

ஊழலற்ற மாநிலம்...

இந்தியாவின் முதல் ஊழலற்ற மாநிலமாக டெல்லியை மாற்றுவோம். சர்வதேச அளவில் சிறந்த தலைநகரமாக ஆக்குவோம்.

பாஜகவின் முயற்சி முறியடிப்பு...

பாஜகவின் முயற்சி முறியடிப்பு...

டெல்லியில் பாஜக தவறான முறையில் ஆட்சி அமைக்க முயன்றது முறியடிக்கப்பட் டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருந்ததுதான் காரணம்.

நேரடிப் போட்டி...

நேரடிப் போட்டி...

வரும் தேர்தலில் பாஜகவுடன் நேரடி போட்டி இருக்கும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர்...

முதல்வர் வேட்பாளர்...

இதற்கிடையே கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக கெஜ்ரிவாலே களமிறக்கப் படுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

English summary
The Aam Aadmi Party (AAP) on Tuesday claimed it would win more than 45 of the 70 seats in the coming assembly elections, and - on coming to power - turn Delhi into one of the best capitals, globally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X