சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா... உ.பியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கத்தை கத்தையாக வரும் கள்ள நோட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உ.பியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கத்தை கத்தையாக கள்ள நோட்டு வந்துள்ளது. கான்பூர் அருகே இருக்கும் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்மில் இருந்து இந்த பணம் வந்துள்ளது.

இதுகுறித்து இரண்டு பேர் புகார் அளித்துள்ளார்கள். போலீஸ் தற்போது இதுகுறித்து விசாரித்து வருகிறது.

ஏடிஎம்மில் எப்படி கள்ள நோட்டு வந்தது என்று தெரியவில்லை என்று வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குழந்தைகள் விளையாடுவது

இந்த பணம் குழந்தைகள் வைத்து விளையாடும் பணம் ஆகும். இது பார்க்க அப்படியே பணம் போலவே இருக்கும். ஆனால் இதில் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலே எழுதி இருக்கும்.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

இதில் இரண்டு பேர் பணம் எடுத்துள்ளார்கள். முதலில் எடுத்தவர் 10,000 ரூபாய் எடுத்துள்ளார். அடுத்து எடுத்தவர் 20,000 ரூபாய் எடுத்துள்ளார். இதில் எல்லா பணமும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

புகார் அளிக்கப்பட்டது

புகார் அளிக்கப்பட்டது

முதலில் வந்தவர் கொடுத்த புகார் உடனடியாக அங்கு இருக்கும் லெட்ஜரில் பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது நபரும் புகார் கொடுத்ததை அடுத்து இந்த விஷயம் பெரிதானது. பின் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டது.

மூடினார்கள்

இதையடுத்து அந்த ஏடிஎம்மை அதிகாரிகள் உடனடியாக மூடினார்கள். இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றுள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fake 500 rupees notes comes in Uttar Pradesh atm. It dispatched from Kanpur Axis bank atm. 2 people dispatched 10000 and 20000 rupees money.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற