டேராடூன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தில் எம்.பி.ஏ மாணவரை என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்ற 17 போலீசாருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
உத்தர்காண்ட் மாநிலத்துக்கு 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி பிரதிபா சிங் பாட்டீல் சென்றிருந்தார். அப்போது ரணவீர் சிங் என்ற எம்.பி.ஏ. மாணவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் நடத்தப்பட்டது போலி என்கவுன்ட்டர் தான் என்றும் 17 போலீசாருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக், தீர்ப்பு விவரங்களை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இன்று குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications