ஃபேஸ்புக்கில் மோடியை அவமதிக்கும் போட்டோ: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சவுதி தலைவர் ஒருவர் முன்பு தலைவணங்கி நிற்பது போன்ற போலி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பரவியது குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு இறுதியாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். தனது சவுதி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில் மோடி சவுதி தலைவர் ஒருவர் முன்பு தலை வணங்கி நிற்பது போன்ற போலி புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியது. அந்த புகைப்படத்தை பார்த்த பாஜக எம்.பி. மகேஷ் கிரி இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார்.
அவர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் அந்த புகைப்படத்தை தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் வெளியிட்டது தெரிய வந்தது. புகைப்படத்தின் உண்மை தன்மை அறியாமல் அதை வெளியிட்டதற்காக நிருபர் மன்னிப்புக் கேட்டார்.
நிருபரின் பொறுப்பற்ற செயலுக்காக அவர் பணியாற்றும் தனியார் தொலைக்காட்சியும் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications