புடவை கட்டினாலாவது பார்ப்பீங்களா மோடி சார் - கேட்கிறார் அய்யாக்கண்ணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக விவசாயிகள் இன்று 32 வது நாளாக புடவை கட்டி போராடி வருகின்றனர். எங்களை சந்திக்க மறுக்கும் மோடி புடவை கட்டினாலாவது சந்திப்பாரா என்று கேட்டுள்ளார் போராட்டக்குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு.

தமிழக விவசாயிகள் தொடர்ந்து இன்று 32வது நாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

நூதன போராட்டங்கள்

நூதன போராட்டங்கள்

எலிக் கறி சாப்பிடுவது, பாம்புக் கறி சாப்பிடுவது, மணல் சோறு சாப்பிடுவது, மீசையை மழித்துக் கொண்டது, அங்கப்பிரதட்சணம் செய்தது, ஆடைகளைக் களைந்து தரையில் உருண்டது என்று பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். நிர்வாண போராட்டம் நடத்தியது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

சேலை அணிந்து போராட்டம்

சேலை அணிந்து போராட்டம்

இன்று விவசாயிகள் சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எங்களை பார்ப்பாரா மோடி

எங்களை பார்ப்பாரா மோடி

தங்களது கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்கும் வரை ஜந்தர் மந்தரை விட்டு நீங்க மாட்டோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடி, எங்களை சந்திக்க மறுப்பது ஏன் என்று அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி இருந்தாலாவது மோடி எங்களை சந்திப்பாரா என்று அவர் கேட்டுள்ளார்.

என்னா ஒரு மீம்ஸ்

நடிகைகளை மோடி சந்திப்பதை வைத்து ஒரு வலைஞர் மீம்ஸ் பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் போது விவசாயிகள் எழுப்பிய கேள்வி தவறில்லை என்றே பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Farmers protest continues for the 32nd day. They wear saris in hope of getting some attention from PM Modi.
Please Wait while comments are loading...