சிக்கிம் எல்லையில் சீனாவின் குடைச்சல்- அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை!
சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நாளை அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
டெல்லி: சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நாளை அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சிக்கிம் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது சீனா. இதனை தடுத்த இந்திய வீரர்களுடன் கைகலப்பில் சீன வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த ஒரு மாதமாகவே இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் படை வீரர்களை குவித்து பலத்தை காண்பித்து வருகின்றன.

மிரட்டும் சீனப் பத்திரிக்கை
சீன அரசுப் பத்திரிக்கையும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கும் என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சீனர்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம்
இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நாளை முக்கிய முடிவு
இந்தக் கூட்டத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சீனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

சீன குடைச்சலுக்கு முற்றுப்புள்ளி
சீன விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பின்பு சீனா கொடுத்துவரும் குடைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு வலுவான ஒரு முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications