For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்வா கிண்டிய அருண் ஜெட்லி… இனி் அடுத்து பட்ஜெட்தான்!

பட்ஜெட் அச்சடிக்கும் பணி துவங்குவதற்கு முன்பு நிதியமைச்சர் அருண் ஜெட்லி அல்வா கிண்டினார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: நிதியாண்டுக்கான பட்ஜெட்டு பைல்கள் அச்சடிக்கும் பணி துவங்குவதற்கு முன் அல்வா தயாரிக்கும் சம்பிரதாயத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தார்.

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2018-2019 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி துவங்கும் முன், அல்வா தயாரித்து வழங்குவது சம்பிரதாயம். இதில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்துக்கொண்டு அல்வா கிண்டினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Finance Minister Arun Jatley attended the ritual halwa ceremony

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த ஆண்டு முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுதான். எனவே, நிதியமைச்சக அலுவலகத்தில் சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, பட்ஜெட் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்துக்கொண்டு இறுதிக்கட்ட அச்சடிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

English summary
Finance Minister Arun Jatley attended the ritual halwa ceremony. It’s a ritual of preparing halwa before printing of budget papers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X