மாட்டுக்கறி சாப்பிட்டே ஆக வேண்டும்.. இளைஞரை மதமாற்றிய காதலியின் குடும்பத்தினர் மீது வழக்கு
போபால்: தனது காதலியின் குடும்பத்தினர் தன்னை இஸ்லாம் மதத்ததுக்கு மதமாறும் வகையில் பெயரை மாற்றி, மாட்டுக்கறி சாப்பிட வலியுறுத்தி துன்புறுத்தியதாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவரது காதலியின் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுபம் கோஸ்வாமி. கடந்த 2022ம் ஆண்டில் இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகினர். அதன்பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர். இருப்பினும் கூட அவர்கள் காதலிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தான் சுபம் கோஸ்வாமியுடனான காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து காதலியின் குடும்பத்தினர் சுபம் கோஸ்வாமியை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். தினமும் 5 முறை நமாஸ் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதோடு அவரது பெயரை சுபம் கோஸ்வாமி என்பதற்கு பதில் அமன் கான் என்று மாற்றம் கடந்த 2023ம் ஆண்டில் மாற்றம் செய்யதனர்.
அதுமட்டுமின்றி மாட்டுக்கறியை உணவாக சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு சுபம் கோஸ்வாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் காதலியின் குடும்பத்தினர் விடவில்லை. தாங்கள் சொல்வதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போலீசில் சிக்க வைப்பதாக கூறியுள்ளனர். சுபம் கோஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலியாக புகார் ஒன்றையும் போலீசில் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபம் கோஸ்வாமியை கைது செய்தனர். 5 மாத சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இப்படி தொடர் தொல்லையை தொடர்ந்து தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகவும், மாட்டுக்கறி சாப்பிட வலியுறுத்துவதாகவும் சும் கோஸ்வாமி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து சுபம் கோஸ்வாமி மத்திய பிரதேச மாநிலம் கூட்டுறவுறத்துறை அமைச்சரான பாஜகவின் சாரங்கிடம் புகார் தெரிவித்தார். அவர் முழு விஷயத்தை கேட்டறிந்தார். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications