மணிப்பூர் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: துப்பாக்கி சூடு- கல்வீச்சு சம்பவங்களால் பதற்றம்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் தேர்தலுக்கு முன்னதாக மொத்தம் 42 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் என்.பி.பி. வேட்பாளரின் தந்தை மற்றும் ஜேடியூ வேட்பாளர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பல வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத்சந்த்பூர் மாவட்டத்தில் பாஜக- காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஒன்று சேதமடைந்தது. இதனையடுத்து புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டது.
கெய்ராவ் வாக்குச் சாவடியில் இரு கட்சியினரிடையேயான மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை என்கின்றன தகவல்கள். சில இடங்களில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications