For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாத்மா காந்தி பற்றிய முதல் ஆவணப்படம் – காந்தி மியூசியத்தில் இன்று திரையிடல்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியின் 67 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை பற்றிய முதல் ஆவணப்படம் இன்று தேசிய காந்தி மியூசியத்தில் திரையிடப்படுகிறது.

மேலும், சர்வோதயா டிரஸ்ட்டிலும், இன்டர்நேஷனல் சென்டரிலும் இன்று மாலை 5 மணிக்கு திரையிடப்படுகிறது.

First documentary on Gandhi to be screened today…

"Mahatma Gandhi: 20th Century Prophet" என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படத்தில் மகாத்மா காந்தி முதன்முதலாக ஆங்கில பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுத்தது முதல் பல அரிய படக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, விடுதலை இயக்கம், திலக் அவர்களின் இறுதிச் சடங்கு ஊர்வலம், தென் ஆப்பிரிக்காவில் காந்தி தங்கியிருந்த போது நடந்த பல அரிய நிகழ்வுகள், 1930 இல் நடந்த சத்தியாகிரக இயக்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

80 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தை எழுத்தாளர் ஏ.கே.செட்டியார் வடிவமைத்ததாகும். முதன்முதலில் இந்த ஆவணப்படம் 1940 இல் தான் ரிலீசானது. இந்த ஆவணப்படம் சென்னையில் முதன்முதலாக கடந்த 1940 இல் ராக்ஸி தியேட்டரில் திரையிடப்பட்டது.

English summary
The first-ever documentary made on Mahatma Gandhi which has "rarest of the rare" video footages including his first interview to a foreign journalist will be screened here tomorrow on his 67th death anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X