For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கொல்லங்கோட்டில் உறவினர்கள் போராட்டம்

ஓகி புயலின்போது காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கொல்லங்கோட்டில்உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கொல்லங்கோடு: ஓகி புயலின் கோரத்தாண்டவத்தின்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மாயமான நிலையில் அவர்களை கண்டுபிடித்து தரக் கோரி
அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கடந்த இரு நாட்களில் கன்னியாகுமரி,தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்தது.

Fishermen's relatives protest in Kanyakumari

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தையே
குப்புற புரட்டி விட்டது இந்த ஓகி.

இந்த ஓகியால் பெரும் பாதிப்புக்குள்ளானது கன்னியாகுமரி மாவட்டம் தான். இங்கு இடுப்பளவு நீரில் இன்னமும் மக்கள் தத்தளித்து வருகின்றனர். தமிழகம், கேரளா
ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 1550 மீனவர்கள் காணாமல் போயினர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Fishermen's relatives protest in Kanyakumari

கேரள மீனவர்களை மீட்க கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை ஆகியன தேவையான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காணாமல் போன 150-க்கும்
மேற்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் உறவினர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் தங்களது உறவினர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

English summary
Fishermen's relatives are protesting in Kanyakumari District's Kollamkode to find out the missing fishermen who were in the sea while Ochki cyclone hit the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X