For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அமைச்சரவையில் இதெல்லாம் கவனிக்கத்தக்க புதிய சமாச்சாரங்கள்....

Google Oneindia Tamil News

டெல்லி: முந்தைய காங்கிரஸ் அமைச்சரவையோடு ஒப்பிடுகையில் மோடியின் அமைச்சரவை பல விதங்களில் வித்தியாசப் பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சுதந்திர இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப் பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

அதேபோல், தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பின் அவரது அமைச்சரவையிலும், முந்தையதைக் காட்டிலும் பல குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன. ஏனெனில் கடந்த முறை 28 உறுப்பினர்களைக் கொண்ட கேபினெட் அமைக்கப் பட்டிருந்தது. அதனை இம்முறை சுருக்கி 24 உறுப்பினர்களாக மாற்றியுள்ளது மோடி தலைமையிலான அமைச்சரவை.

பெண்களின் பங்களிப்பு :

பெண்களின் பங்களிப்பு :

மோடியின் 24 பேர் கொண்ட அமைச்சரவையில் நான்கில் ஒருவர் பெண். கடந்த ஆட்சியின் அமைச்சரவையில் மொத்தம் 7 சதவீதமே பெண்களின் பங்களிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண்மணி :

முதல் பெண்மணி :

சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றிருப்பதன் மூலம் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பின் முதன்முறையாக பெண் ஒருவர் அமர்கிறார் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1984ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்ததை அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

சொத்து மதிப்பு :

சொத்து மதிப்பு :

புதிய அமைசரவையின் நடுத்தரமான மொத்த சொத்து மதிப்பு ரூ 4.7 கோடி ஆகும். முந்தைய அமைச்சரவையில் இது ரூ 13 கோடியாக இருந்தது. அமைச்சரவையின் மிகப் பணக்கார அமைச்சர் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான அருண் ஜெட்லி ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ 113 கோடி என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெளிநாட்டில் கல்வி பயின்றவர்கள் :

வெளிநாட்டில் கல்வி பயின்றவர்கள் :

இந்தப் புதிய அமைச்சரவையில் நஜ்மா ஹெப்துல்லாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்திய பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் ஆவார்கள். அவர் மட்டும் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். கடந்த அமைச்சரவையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட எட்டு பேர் பிறநாட்டு பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்றவர்கள். கடந்த அமைச்சரவையைப் போலவே தற்போதுள்ளதிலும் ஒன்பது வழக்கறிஞர்கள் உள்ளனர்.

சராசரி வயது :

சராசரி வயது :

தற்போதுள்ள அமைச்சரவையில் சராசரி வயது அறுபது ஆகும். இது கடந்த அமைச்சரவையில் 68 ஆக இருந்தது. அதேபோல், மிகக் குறைந்த வயதுடையவர் என்ற பெருமையை தற்போது 38 வயதாகும் ஸ்மிரிதி இரானியும், இதற்கு முன்னர் 49 வயதான ஜி.கே.வாசனும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பின்னணி :

அரசியல் பின்னணி :

கடந்த அமைச்சரவையில் ஐந்து பேர் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய அமைச்சரவையில் மூன்று பேர் மட்டுமே அரசியல் பின்னணி கொண்டவர்கள்.

மேனகா காந்தி :

மேனகா காந்தி :

முன்னாள் பிரதமரான இந்திராகாந்தியின் மருமகள் மேனகா காந்தி. அதேபோல், ரவிசங்கர் பிரசாத்தின் தந்தை, பாஜக உருவாவதற்குக் காரணமான ஜன சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். மேலும், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகள்; பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலின் மனைவி

English summary
The size of Modi cabinet, the government’s highest decision-making body, is 24, smaller than the outgoing Manmohan Singh cabinet that had 28 members. Apart from the size, here are five ways in which Modi’s cabinet is different from the outgoing one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X