குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்.. குவாஹாத்தியில் விமானங்கள் ரத்து
Recommended Video
குவாஹாத்தி: குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் குவாஹாத்தி, திப்ரூகர் நகரங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதையடுத்து அது சட்டமாக மாறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துவிட்டது.

இதையடுத்து அங்கு வன்முறை சம்பவங்களும் நடந்தன. வாகனங்களை கொளுத்துவது , தடுப்புகளை உடைப்பது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டும் ரப்பர் குண்டும் தடியடியும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் குவாஹாத்தி, திப்ரூகர் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் இன்றும் நாளையும் மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications