Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் ஒரு உத்தரவா.. அரசு நகலை எரித்து போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் பரபர!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில் சாலையோரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஆந்திர அரசு தடை விதித்தது. இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று சொந்த ஊரில் போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு அரசின் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடு ஆந்திரா முழுவதும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வந்தார்.

8 பேர் பலி சம்பவம்

8 பேர் பலி சம்பவம்

அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நெல்லூர் மாவட்டம் கந்தகூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். சந்திரபாபு நாயுடுவுவை காண பெருமளவு கட்சித் தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பகுதியில் இருந்த கால்வாயில் கட்சித்தொண்டர்கள் தவறி விழுந்தனர். இதில் 8 பேர் பலியாகினர். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடையூறு ஏற்படாத வகையில்

இடையூறு ஏற்படாத வகையில்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் 8 பேர் உயிரிழப்புக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது. மேலும் சாலைகளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், போக்குவரத்து இடையூறு, பொதுமக்கள் அவசர கால சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து பரிசீலனை செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கூட்டம் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவே அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆந்திர அரசின் இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.

அரசின் உத்தரவு நகலை எரித்தார்

அரசின் உத்தரவு நகலை எரித்தார்

அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஷங்கராந்தி பண்டிகையை இன்று தனது சொந்த ஊரில் கொண்டடிய ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சாலை ஓரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட அரசின் உத்தரவு நகலை எரித்தார். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை மக்கள் எரித்து கொண்டாடுவதை போல அரசின் உத்தரவு நகலை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் எரித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

நாட்டின் மிகப்பெரிய சொத்து

நாட்டின் மிகப்பெரிய சொத்து

பின்னர் அங்கு கூடியிருந்த தனது கட்சியினர் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, "தெலுங்கு மக்களின் வாழ்க்கை தரத்தை தெலுங்கு தேசம் கட்சி வருகைக்கு முன்பாகவும் பிறகாகவும் என பார்க்க வேண்டும். நாட்டின் மிகப்பெரிய சொத்து இளைஞர்கள்தான். நான் ஊக்குவித்த தகவல் தொழில்நுட்பத்துறை தற்போது மிகச்சிறந்த முடிவுகளை வழங்கிக்கொண்டு இருக்கிறது. சில தலைவர்கள் இன்றைய தினத்தை மட்டும் பற்றி சிந்திப்பார்கள் . சில தலைவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பார்கள். நான் எப்போதும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே சிந்திப்பேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+