’காணவில்லை’ 24 வருட அத்யாயம் ஓவர்..பாஜகவிடம் வீழ்ந்த அஸ்திரங்கள்! ஒடிசாவில் மாயமான விகே பாண்டியன்?!
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்தவரும் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவருமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான விகே பாண்டியன் கடந்த சில நாட்களாக மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
உலக அளவில் மிக பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் 18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 3வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. மே 13ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நான்கு கட்டங்களாக 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதற்காக ஒடிசாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி 3 வாரங்களில் 4முறை அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக சார்பில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் அங்கே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அவர்கள் நவீன் பட்நாயக்கை விமர்சித்ததை விட அவரின் நிழல் போல இருந்த தமிழகத்தை சேர்ந்த விகே பாண்டியனையே குறிவைத்தனர்.
ஒடிசாவில் 24 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் பிஜு ஜனதா தள கட்சியின் ஆட்சியை அமைக்க தீவிரம் காட்டினார். அங்குள்ள 147 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 145 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 48 தொகுதிகளும் களமிறங்கின. அங்கு தேர்தலை பிரச்சாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்-க்கு நெருக்கமானவருமான விகே பாண்டியனின் பெயர் தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது.
ஒரு தமிழர் ஒடிசாவை ஆளலாமா என பாஜகவின் அமித்ஷா பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் இந்த பேச்சு கடும் கண்டனங்களை பெற்று தந்தது ஒரு மத்திய அமைச்சர் இனவாதம் பேசலாமா எனவும் கேள்விகளை எழுப்பினர். மேலும் குஜராத்திகளான மோடியும் அமித் ஷாவும் இந்தியாவை ஆளலாமா எனவும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளில் பிஜூ ஜனதா தளத்திற்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்குள்ள 21 எம்பி தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் சட்டப்பேரவையிலும் அந்த கட்சி தோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 144 எம்எல்ஏ சீட்டுகளில் 79 இடங்களை பிடித்த பாஜக முதன் முறையாக அங்கு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் பிற கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதன் காரணமாக பிஜு ஜனதா தளம் கட்சிக்குள்ளேயே பிரச்சனை வெடித்து இருக்கிறது. பிஜேடியின் தோல்விக்கு விகே பாண்டியன் தான் காரணம் என பிரச்சனை எழுந்திருக்கிறது. ஏற்கனவே விகே பாண்டியன் பிஜேடி கட்சியில் முக்கியத்துவம் பெற்றபோது பல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தற்போது அந்த விவகாரம் மேலும் அதிகமாகி இருக்கிறது. கே. பாண்டியன் தான் தன்னுடைய அரசியல் வாரிசு என நவீன் பட்நாயக் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியன் தன்னுடைய அரசியல் வாரிசு அல்ல ஒடிசா மக்கள் தான் அதனை முடிவு செய்வார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விகே பாண்டியன் மாயமாகி இருப்பதாக விவகாரம் புதிதாக வெடித்திருக்கிறது. கடந்த நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வி கே பாண்டியன் மாயமானதாக கூறப்படுகிறது. 24 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் எனது பதவியை ராஜினாமா செய்த போது, அவருக்கு நெருக்கமாக இருந்த விகே பாண்டியன் ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை. அதற்கு பிறகும் பொதுவெளியில் அவர் யார் கண்களிலும் படவில்லை என கூறப்படுகிறது. அவரது பங்களாவும் வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பிஜேடி மற்றும் ஒடிசா மாநிலத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
யார் இந்த விகே பாண்டியன்: ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான விகே பாண்டியன் மதுரையைச் சேர்ந்தவர்.
2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற விகே பாண்டியன் பஞ்சாப் கேடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் ஒடிஸா ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணமுடித்ததால் அம்மாநில பணிக்கு மாற்றப்பட்டார்
ஒடிசா மக்களின் நம்பிக்கை நாயகனாக இருந்த வி.கே.பாண்டியன் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர் விஆர்எஸ் பெற்று அந்த கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தல் ஒடிசாவின் முக்கிய அதிகார மையமாக வி.கே.பாண்டியன் வலம் வந்த நிலையில் தான் தற்போது அவர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications