முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்!
கொல்கத்தா: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறைவுகளின் போதே தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார்.

ஆனால் கடைசிவரை பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை. இருப்பினும் நாட்டின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
அவரது மகன் அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் அபிஜித் பானர்ஜி.
இது குறித்து கருத்து தெரிவித்த அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்தேன். எந்த ஒரு பதவியிலும் நான் இருந்தது இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து பணிபுரிய வேண்டும்.
தற்போது மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பாஜகவுக்கு கடுமையான சவாலாக திகழ்கிறார். அதனால் அவரது தலைமையை ஏற்று செயல்படுகிறேன் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications